search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருண் ஆரோன்"

    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வருண் ஆரோன், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். #IPL2019 #KKRvRR
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்தான்.

    அவர் நான்கு ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தொடக்க பேட்ஸ்மேன்களான கிறிஸ் லின் (0), ஷுப்மான கில் (14) ஆகியோரை அவுட்டாக்கியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் ஏற்கனவே இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வருண் ஆரோன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை. எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்’’ என்றார்.

    வருண் ஆரோன் கடைசியாக 2014-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதிவேகமாக பந்து வீசும் திறன் படைத்த வருண் ஆரோன் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஜார்கண்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். 2011-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். அசுர வேகத்தில் பந்து வீசும் வருண் ஆரோன், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் 2015-ம் ஆண்டும், இலங்கைக்கு எதிராக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.

    சுமார் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் வருண் ஆரோன் தற்போது கவுன்ட்டி போட்டியில் லெய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். சிறப்பாக பந்து வீசி வரும் வருண் ஆரோன் கிளேமோர்கன் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 65 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.



    கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக பந்து வீசும் என்னால், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வருண் ஆரோன் கூறுகையில் ‘‘மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கவுன்டி போட்டியிலும் என்றால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    என்னால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்று தேர்வாளர்கள் விரும்பினால், என்னால் இந்த அணிக்காக விளையாட முடியும். என்னால் அதிவேகத்திலும் என்னுடைய சிறந்த பந்து வீச்சையும் வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.
    ×